மட்டக்களப்பில் பாரிய டெங்கு பரிசோதனை முன்னெடுப்பு

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று (10) பாடசாலைகள் அரச திணைக்களங்கள், ஆலயங்கள், கட்டட நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படும் இடங்கள் போன்றவற்றில் தேசிய செயல் திட்டத்தின் மூன்றாவது நாளான இன்று டெங்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களமும் போலீஸ் திணைக்களத்தின் சுற்றாடல்,டெங்கு ஒழிப்பு பிரிவும் மட்டக்களப்பு மாநகர சபை,மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்ததாக
இந்தப் பாரிய டெங்குப் பரிசோதனை செயற்திட்டம் நடைபெற்றது.

இன்று சுவாமி விபுலானந்தர் இசை நடன கல்லூரியில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் வைத்தியர் எஸ் உதயகுமார் தலைமையில் இந்தப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது

அதிகளவு மாணவர்களைக் கொண்ட இந்த வளாகத்தில் குடிநீர்க் கிணறுகள், கழிப்பறை வடிகான்கள்,பூந்தோட்டம், சுற்றுப்புறச் சூழல் என்பன பூரணமாகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதிக டெங்கு நோயாளிகள் காணப்படுவதனால் அதிலும் குறிப்பாக மண்முனை வடக்கு,கிரான் பிரதேச செயலகப் பிரிவில் தொடர்ச்சியாக டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டு வருவதனால், இந்தத் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தில் இந்தப் பிரதேச செயலக பிரிவில் அதிகப்படியான பரிசோதனை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ் உதயகுமார் தெரிவித்தார்.

எஸ். வரதராஜன்