மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் பயப்படுகிறது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளால் தற்போதைய அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே மாகாண சபைத் தேர்தலை அது வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

‘மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் கோழைத்தனமான அநுரவின் வெறியாட்டத்தை தோற்கடிப்போம்’ என்ற கருப்பொருளில் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.