நொச்சியாகமை- தழுவை முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற யுவதிகள் இருவர் உட்பட மூவர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்
இன்று (06) மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தழுவை முகத்துவாரப் பகுதிக்கு நீராடச் சென்ற போது உயிரிழந்த 18 , 19 வயதுடைய யுவதிகள் இருவர், 24 வயதுடைய இளைஞர் ஆகியோர் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து நொச்சியாகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
