பட்டிப்பளை பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிரமதானம்

உலக சுற்றாடல் தினத்தையொட்டி பட்டிப்பளை பிரதேச செயலகத்தினால் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.

உலக சுற்றாடல் தினத்தையொட்டி பட்டிப் பளை பிரதேச செயலகம் ஏற்பாட்டில் பிரதேச சுகாதார திணைக்களத்தின் பங்கேற்புடன் துப்புரவு பணிகள் இடம்பெற்றதன.

பிரதேச செயலாளர் எஸ். சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலக ஊழியர்கள் பொது சுகாதாரப் பரிசோதகர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் நன்னீர் மீன் இனங்களைப் பாதுகாக்கும் நோக்குடனும் கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் உள்ள இரு பகுதிகளிலும் இந்தத் துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

எஸ். வரதராஜன்