ஈரான் போர் பற்றிய வாக்கெடுப்பு நாட்டுப்பற்று இல்லாத செயல்!

ஈரான் போரை நிறுத்​தக் கோரி அமெரிக்க பாராளுமன்​றத்​தில் தீர்மானம் நிறைவேற்றப்​பட்டிருப்பது நாட்டுப் பற்று இல்லாத செயல் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும்போதே இந்த அர்த்தமற்ற வாக்கெடுப்பு நடத்தப்படுவது தமது அதிகாரங்களை கட்டுப்படுத்தும் நோக்கம்” என குறிப்பிட்டுள்ளார்.

இதில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மோசமான 4 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளார்கள். இத்தகைய நாட்டுப் பற்று இல்லாத செயலை யார் செய்வார்கள்? பேச்சுவார்த்தைகள் எந்த நிலையில் உள்ளன என்பது அவர்களுக்குத் தெரியும் என அவர் மேலும் தெரிவித்தார்.