2026 உலக சுற்றாடல் நாள் தேசிய நிகழ்ச்சி, ‘காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்’ என்ற கருப்பொருளின் கீழ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்று (05) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வையொட்டி மே 30 ஆம் திகதி முதல் ஜூன் 05 ஆம் திகதி வரை சுற்றுச்சூழல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு, “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் முன்னணி அரச, தனியார்,தொண்டர் அமைப்புகளின் பங்களிப்புடன் நாடு முழுவதும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தொடர்பான பல்வேறு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
