பொருளாதார முகாமைத்துவம் பற்றி அரசாங்கத்திற்கு எதுவும் தெரியாது!

பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் பேசும்போது பேரினப் பொருளாதாரம்,நுண்பொருளாதாரம் என்று இரண்டு பரிமாணங்கள் காணப்படுகின்றன. ஆனால் இன்று நாட்டில் இவை இரண்டில் எதுவும் முன்னெடுக்கப்பட்டபாடில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நுண், சிறிய, நடுத்தர தொழில்முனைவோரொடு தற்போதைய பொருளாதார நிலையால் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கருத்து தெரிவித்தார்.

நுண் பொருளாதார முகாமைத்துவத்தையும் இந்த அரசாங்கம் புறக்கணித்துள்ளது. தனிநபர்கள், குடும்பங்கள்,தொழில்முனைவோர் இதில் அடங்குவர்.

இவர்கள் நாட்டிற்கு செல்வத்தை உருவாக்குகின்றனர். தற்போதைய அரசாங்கம் நுண் பொருளாதார முகாமைத்துவத்தையும் புறக்கணித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைகளைக் கையாள பேரின,நுண் பொருளாதார முகாமைத்துவம் குறித்து சிந்திக்க வேண்டும். இது தொடர்பான பிரச்சினைகளை எதிர்காலத்தில் மீண்டும் ஒருமுறை பாராளுமன்றத்தில் முன்வைப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.