மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் முன்பாக தனியார் பேருந்தும் சிறிய ரக லொறி ஒன்றும் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் நடத்துநர் உட்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
ஆரையம்பதியில் இருந்து கதுருவெலை பிரதேசத்துக்குப் பயணித்த தனியார் போக்குவரத்து பஸ் வண்டியும் வாழைச்சேனை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிஸ்கட்கள் ஏற்றிச் சென்ற லொறியும் சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்னால் உள்ள பிரதான வீதி பாதசாரிகள் வீதியை கடக்கும் வெள்ளைக் கோட்டுப் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
சா. நடனசபேசன்

