வேப்பையடி கலைமகளில் குடிநீர் திட்டமும் மேலதிக வகுப்புகளும்

வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலய பாடசாலையின் அதிபர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இணைந்த கரங்கள் உறவுகள் ஊடாக பயணிக்கும் கண்ணன் வேல்முருகு அவர்களின் 60 ஆவது பிறந்த தினத்தையொட்டி 28.04.2926 அன்று பாடசாலையில் மாணவர்களின் நலன் கருதி குடிநீர் வசதி மற்றும் மேலதிக வகுப்புகளான கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், கணினி ஆகிய நான்கு பாடங்களும் அங்குரார்ப்பண நிகழ்வு பாடசாலையின் அதிபர் க. தியாகராஜா தலைமையில் நடைபெற்றது.

.இந்நிகழ்வில் வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர் எம். ஏ. அஸ்வர், ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் சா. மோகன் கலந்துகொண்டனர்.

கெளரவ அதிதிகளாக கண்ணன் அனோமிகா. கண்ணன் அகஸ்திகா கலந்துகொண்டு அவர்களது கரங்களினால் குடிநீர்த் திட்டம் உத்தியோக பூர்வமாக திரைநீக்கம் செய்யப்பட்டு குடிநீர் இணைப்புகள் திறந்து வைக்கப்பட்டன.

இணைந்த கரங்கள் சார்பாக காந்தன், அம்பாரை மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் முதல் நிலையைப் பெற்ற மாணவன் ரமேஸ் தேஜித் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

சா. நடனசபேசன்