மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் தெரிவித்தார்.
எதிர்வரும் மே மாதம் ஜனாதிபதி மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு அபிவிருத்தி செயற்திட்டங்கள், நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடி தீர்வுளை வழங்கவுள்ளார்.
ஜனாதிபதி வருகையின்போது கலந்துரையாட வேண்டிய விடயங்களை அடையாளம் காண்பது தொடர்பான முன்னாயத்தங்களைத் துறைசார் அதிகாரிகளுடன் கடந்த இரண்டு வாரங்களாக அரசாங்க அதிபர் மேற்கொண்டு வருகின்றார்.
சா. நடனசபேசன்



