கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலய வளாகத்தில் இன்று ஏப்பிறல் 21 ஆம் திகதி காலை விசேட வாகனப் போக்குவரத்து ஒழுங்கு மேற்கொள்ளப்படுவதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு ஏழாண்டு நிறைவையொட்டி இன்று விசேட தேவ ஆராதனை நடைபெறுகிறது.
காலை ஏழு மணி முதல் ஆராதனை நிறைவடையும் வரை இந்த விசேட வாகனப் போக்குவரத்து அமலில் இருக்கும்.
