இலங்கை,இந்தோனேசிய கடற்படைகளின் பங்கேற்புடன், கடல்சார் ஒத்துழைப்பு, கடற்படை மரபுகளை வெளிப்படுத்தும் வகையில் காலி முகத்திடலில் ஒரு பிரம்மாண்டமான நகர அணிவகுப்பு நடைபெற்றது.
நல்லெண்ணப் பயணமாக நாட்டுக்கு வருகை தந்த இந்தோனேசியக் கடற்படையின் ‘KRI BIMA SUCI – 945’ என்ற பாய்மரக் கப்பலின் குழுவினர்,இலங்கைக் கடற்படையினரின் பங்கேற்புடன், 2026 ஏப்பிறல் 16 அன்று காலி முகத்திடலில் ஒரு பிரம்மாண்டமான கலாசார நிகழ்ச்சியும் நகர அணிவகுப்பும் நடைபெற்றது.
காலத்தால் அழியாத கலாசாரப் பிணைப்புகளையும் கடல்சார் ஒத்துழைப்பையும் அடையாளப்படுத்திய நகர அணிவகுப்பு,கலாசார நிகழ்ச்சியில், இந்தோனேசிய கடற்படை கெடட் அதிகாரிகள், கடற்படை, கடல்சார் அகடமியில் பயிற்சி பெறும் கெடட் அதிகாரிகள், இலங்கை கடற்படை இசைக்குழு, கலாசாரக் குழு உட்பட இருபத்தாறு (26) வெளிநாடுகளைச் சேர்ந்த கெடட் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடல்சார் ஒத்துழைப்பையும் பரஸ்பர புரிதலையும் வலுப்படுத்திய இந்த நிகழ்வில், இலங்கைக்கான இந்தோனேசியத் தூதர், மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி, இந்தோனேசிய தூதரகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் பங்கேற்றனர்.
காலி முகத்திடலில் கூடியிருந்த பொதுமக்களுக்கும் இந்தச் சிறப்பு நிகழ்வைக் காணும் வாய்ப்பு கிடைத்தது.
