கல்லடியில் 105 போத்தல் கசிப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது!

மட்டக்களப்பு, கல்லடி வேலூர் பகுதியில் கசிப்பு என்கின்ற சட்ட விரோத மதுபானம் விற்ற குற்றச்சாட்டில் 105 போத்தலுடன் பெண் ஒருவரை நேற்று பிற்பகல் கைது செய்ததாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்

ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஒன்றாக எனும் போதைப் பொருள் ஒழிப்பு விசேட திட்டத்திற்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியான தேடுதல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே மட்டக்களப்பு தலைமையகப் பொறுப்பதிகாரி ஜி.ம்.பி.ர பண்டார தலைமையிலான குழுவினர் கசிப்பு விற்பனை நிலையங்களை முற்றுகையிட்டுள்ளனர்.

எஸ். வரதராஜன், மட்டக்களப்பு