தேரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது!

ஜனாதிபதியோ அரசாங்கமோ மக்கள் ஆணைக்கு எதிராகச் செயற்பட மாட்டார்கள் என விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கக் கோரி நடைபெற்ற நடைபயணம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தாம் உள்ளிட்ட குழுவினருக்கு கிடைத்த மக்கள் ஆணையின்படியே செயற்பட்டு வருகின்றார்.

கடந்த ஆட்சிக் காலத்தைப் போல் அல்லாமல், தற்போது நாட்டின் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையால், அந்த நடைபயணமாக வந்த தேரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் ஜனாதிபதியும் அரசாங்கமும் மக்கள் ஆணைக்கு எதிராகச் செயற்பட்டதாக கருத நேரிடும் எனவும் கே.டி. லால் காந்த மேலும் குறிப்பிட்டார்.