ஷிரந்தி ராஜபக்‌ஷ மருத்துவமனையில் அனுமதி

சிரிலிய சவிய கணக்கு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா ஒரு கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எஸ்.ஆர்.இரவீந்திரன்