எஜமானின் இறுதி ஆசைப்படி அவரது உடலை சுமந்து சென்ற காளைகள்!

மன்னார் – நறுவிலிகுளத்தில் தமது எஜமானின் இறுதி ஆசையை நிறைவேற்றி அவரது பூதவுடலை காளைகள் சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காளைகளின் எஜமான், தான் இறந்தால், தனது உடலைக் காளைகள் பூட்டிய தனது மாட்டு வண்டியிலேயே எடுத்துச் செல்ல வேண்டும் என்பது அவரது கோரிக்கையாக இருந்தது.

அதற்கமைய நேற்று இடம்பெற்ற அவரது இறுதி ஊர்வலம் அவரது விருப்பத்திற்கு ஏற்றவாறு காளைகள் பூட்டிய வண்டிலிலேயே இடம்பெற்றது.

எஜமானின் உடலை சுமந்து சென்ற காளைகளின் முகத்திலும் சோகம் காணப்பட்டது. இந்தச் சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள் ஆழ்த்தியது.