சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்படுகின்றன.
12.5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ உருளையின் விலை விலை 775 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 4,765 ரூபாயாகும்.
12.5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு உருளையின் விலை 1070 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 5,700 ரூபாயாகும்
5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ உருளை 308 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,910 ரூபாயாகும்.
2.3 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டர் விலை 140 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 890 ரூபாவாகும்.
அதேநேரம் 5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு உருளையின் விலை 418 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 2,280 ரூபாயாகும்.
