சப்பிரகமுவ மாகாணத்தின் நிவித்திகல பிரதேசத்தில் அமைந்துள்ள தொலஸ்வல பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான மேலதிக கற்றல் வகுப்புகள் இணைந்த கரங்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இணைந்த கரங்களின் ஊடாக விஞ்ஞானம், கணிதம்,ஆங்கிலம் ஆகிய மூன்று பாடங்களுக்குமான மேலதிக கற்றல் வகுப்புகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்ச்சி தொலஸ்வல பாரதி தமிழ் வித்தியாலயத்தின் அதிபர். சொ. செல்வகுமரன் தலைமையில் இடம்பெற்றது.
இணைந்த கரங்கள் அமைப்பினரிடம் கடந்த சில வாரங்களுக்கு முன் இப்பாடலை அதிபர் விடுத்த கோரிக்கைக்கமைய இம்மாணவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சியினை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டுவரும் இணைந்த கரங்கள் அமைப்பானது இதனை நிவர்த்தி செய்தது.
இந்நிகழ்வுக்கு சப்பிரகமுவ மாகாணப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் வடிவேல் சண்முகநாதன், வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி குந்தலா ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இணைந்த கரங்கள் உறுப்பினர்களான காந்தன், அதிபர் திரு. க. தியாகராஜா, க. இந்திராதேவி, எமாலினி பிலிப், க. பங்கயற் செல்வி, இப்பாடங்களை கற்பிக்கும் வளவாளர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.மேலதிக கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகிய மூன்று பாடங்களுக்கும் ஆசிரியர் ஒருவருக்கு ரூபா 12000/= வீதம் மாதாந்தம் ரூபாய் 36000.00 நிதியினை இணைந்த கரங்கள் உறவுகளோடு இணைந்து பயணிக்கும் ஜனபாலச்சந்திரன் கோபாலப்பிள்ளை, டேனில் செந்து சுகுணராஜன் ஆகிய இருவரும் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
சா. நடனசபேசன்






