மட்டக்களப்பு தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடுகள்

புனித வெள்ளியை ஒட்டி மட்டக்களப்பு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடுகள் நடைபெற்றன.

உலகவால் கிறிஸ்தவர்களின் புனித வழிபாடுகளில் ஒன்றான இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் புனித வெள்ளியை ஒட்டி இன்று மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம் பெற்றன.

மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் பேராலய பங்குத்தந்தை எஸ். ஜெயகாந்தன் தலைமையில் புனித வெள்ளி சிலுவைப்பாதை பாடுகளின் நினைவு நிகழ்வுகள் இன்று காலை இடம் பெற்றன.

புனித வெள்ளி தினத்தில் இன்று காலை ஆலயத்தில் இருந்து ஆரம்பமான சிலுவைப்பாதை ஊர்வலம் நகரின் பிரதான வீதிகளுடாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது

தவக்காலத்தில் கிறிஸ்தவ மக்கள் இயேசு ஆண்டவரின் நினைவில் இருந்து வாழ்க்கையில் கைப்பற்ற வேண்டிய நெறிமுறைகள் பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் புனித வெள்ளி ஜெப வழிபாடுகளும் பக்திபூர்வமாக இடம்பெற்றன.

எஸ். வரதராஜன், மட்டக்களப்பு