வைத்தியத் துறைக்குத் தெரிவான பிரஜித்துக்குப் பாராட்டு

வெளியாகிய உயர்தரப் பரீட்சையில் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 15 ஆம் கிராமத்தினைச் சேர்ந்த அன்பழகன் பிரஜித் கல்முனை பற்றிமா தேசியபாடசாலையில் கற்று வைத்தியத்துறைக்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.

மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் 27ஆவது இடத்தினைப் பெற்றுச் சாதனைபடைத்த இவரை வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலய அதிபர் கே.தியாகராஜா, பிரதி அதிபர் மா. தர்மலிங்கம், ஆசிரியர்கள் பாராட்டிக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

சா. நடனசபேசன்