தித்வா புயல் காரணமாக சேதமடைந்த நுவரெலியா நகர வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் இன்று (25) ஹாவா எளிய சிட்டி சந்தி பகுதியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்த வைபவத்தில் போக்குவரத்து,பெருந்தெருக்கள், நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து வீதிகளையும் புனரமைப்பு செய்வதற்கான வேலைத்திட்டமாக இன்று ஆரம்ப நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி கல்வி, உயர் கல்வி அமைச்சருமான வைத்தியர் மதுர செனவிரத்ன, நுவரெலியா மாநகர முதல்வர்,வீதி அபிவிருத்தி அதிகார சபை தலைவர்,நுவரெலியா மாநகர சபையின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கௌசல்யா



