பயனாளிகளுக்கு வீட்டுத்திட்ட காசோலை வழங்கி வைப்பு

மண்முனை தென்மேற்கு பிரதேச செலகப் பிரிவுக்குட்பட்ட 22 பயனாளிகளுக்கு வீட்டுத்திட்ட காசோலை வழங்கி வைக்கப்பட்டது.

வீடற்றவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக்; கொடுக்கும் அரசாங்கத்தின் செயற்றிட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வீட்டுத் திட்டங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன.

ஒரு வீட்டிற்கு தலா 10 இலெட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 22பயனாளிகளுக்கு வீடுகளை அமைப்பதற்கான முதற்கட்ட கொடுப்பனவு 150,000 வீதம் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

பட்டிப்பளை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமான கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு முதல் கட்ட காசோலைகளை வழங்கி னார்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையார் ரி. சுபாஸ்கரன், தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தர், கணக்காளர், பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள், பனாளிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு வரதன்