மொழி பன்முகத்தன்மை பன்முக பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது

இலங்கையின் மொழி பன்முகத்தன்மை நாட்டின் பன்முக பாரம்பரியத்தின் செழுமையைப் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச தாய்மொழி தினம் 2026 கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

மொழி உரிமைகளைப் பாதுகாப்பதும், பன்மொழிக் கல்வியை ஊக்குவிப்பதும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், எதிர்கால சந்ததியினருக்கு அதிகாரம் அளிக்கவும் உதவும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.