சட்ட விரோத சிகரட்டுகளுடன் கைதான இந்தியரும் இலங்கையரும் நீதிமன்றத்தால் அபராதம் விததிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்
கடந்த 3 ஆம் திகதி (03) பிற்பகல் 2:00 மணியளவில் நுவரெலியா இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, நுவரெலியா மது வரித் திணைக்கள அதிகாரிகள் சோதனை நடத்தி தமிழ்நாட்டில் உள்ள காய்கறி கடையின் உரிமையாளர் என்று கூறிக்கொள்ளும் இந்தியர் ஒருவரைக் கைது செய்தனர்.
அத்தோடு நுவரெலியா பியதிஸ்ஸ புரத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரையும், நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைந்துள்ள இந்திய நாட்டவருக்குச் சொந்தமான காய்கறி கடையில் சட்டவிரோதமாக விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்ட 220 வெளிநாட்டு தடைசெய்யப்பட்ட சிகரெட்டுகளையும் கைப்பற்றி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் தலா ரூ. 20,000 அபராதம் விதித்து நுவரெலியா நீதவான் உத்தரவிட்டார்.
அபராதம் செலுத்திய பின்னர் இருவரையும் விடுதலை செய்யுமாறு நீதிபதி திருமதி புத்திகா தர்மதாச உத்தரவு பிறப்பித்தார்.
ஆர். எப். எம். சுஹெல்
