மகாவலி ஆற்றுப் படுகையில் வசிப்போருக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த 24 மணித்தியாலத்திற்கு இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும். நீரேந்தும் பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தளாய். மூதூர், கிண்ணியா, சேருவிலை, வெலிக்கந்தை, லங்காபுர, திம்புலாகலை, தமன்கடுவை ஆகிய பகுதிகளுக்கு வெ ள்ளப்பாதிப்பு ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
