இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு, வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை

இரத்தினபுரியில் நேற்று முன்தினம் (05) இரவு முதல் பெய்து கடும் மழை காரணமாக இரத்தினபுரி நகரத்தில் உள்ள களுகங்கையின் நீர்மட்டம் 19 அடி வரை உயர்ந்து காணப்படுகிறது.

இதனால் இரத்தினபுரி நகரத்திற்கண்மையிலுள்ள தாழ் நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து மழை பெய்யும் காலநிலை காணப்படுவதனால் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதேவேளை இம்மாவட்டத்தில் மண்சரிவு அபாயமும் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

எஸ்.ஆர். இரவீந்திரன்