வெல்லம்பிட்டியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

கொழும்பு வெல்லம்பிட்டியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இருவரை இலக்குவைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடதத்தப்பட் டிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து தோட்டாக்கள், கையடக்கத் தொலைபேசியொன்று என்பவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.