ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு எரிக் சோல்ஹேய்ம் கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு எரிக் சோல்ஹேய்ம் கோரிக்கை விடத்துள்ளார்.

இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதானத் தூதுவரான எரிக் சோல்ஹேய்ம், ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமைக்குக் கடும் வருத்தம் தெரிவித்துள்ளதோடு அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறும் கேட்டுள்ளார்.

திரு. சோல்ஹேய்ம் தனது டுவற்றர் பதவில் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அரசியல் தலைவர்கள், தெற்காசியா, உலகத் தலைவர்களுடன் இணைந்து ரணில் விடுதலையை வலியுறுத்துவதாக திரு. சோல்ஹேய்ம் தெரிவித்துள்ளார்.

2022இல் இலங்கையின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்றபோது நாட்டை மீட்டெடுத்தவர் ரணில் விக்கிரமசிங்க என்று குறிப்பிட்டுள்ள எரிக் சோல்ஹேய்ம், ரணில் மீதான குற்றச்சாட்டு பெறுமதியற்றது என்றும் கூறியுள்ளார்.

ஊழலை ஒழிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.