துறைநீலாவணையில் மென்பந்து கிறிக்கற் சுற்றுப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
துறைநீலாவணை லயன் ஸ்ரார் விளையாட்டுக்கழகத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவினையொட்டி கிறிக்கட் மென்பந்துச் சுற்றுப்போட்டியும் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கழகத்தின் தலைவர் அ. துசாந் தலைமையில் துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் விழா நடைபெற்றது.
கடந்த இரண்டு வாரங்களாக நடத்தப்பட்ட இச்சுற்றுப்போட்டிக்கு மட்டு அம்பாரை மாவட்டங்களைச் சேர்ந்த 48 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றின.
இதில் மண்டூர் அருள்மணி விளையாட்டுக்கழகம் முதலாமிடத்தினையும் செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக்கழகம் இரண்டாமிடத்தினையும்பெற்றன.
இந்நிகழ்ச்சியில் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன், மண்முனைதென் எருவில்பற்றுப்பிரதேச சபைத் தவிசாளர் எம்.வினோராஜ், பிரதித்தவிசாளர் அ.வசிகரன், பிரதேசசபை உறுப்பினர் சு.இளமாறன் துறைநீலாவணை தமிழரசுக்கட்சி வட்டாரக்கிளைத் தலைவர் த. கணேசமூர்த்தி துறைநீலாவணை மகாவித்தியாலய அதிபர் எஸ்.கிருபைராசா, பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.



மட்டக்களப்பு சா.நடனசபேசன்
