உள்ளூராட்சித்தலைவர்கள் குப்பை வண்டியில் வருகை

இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றிய உள்ளூராட்சித்தலைவர்கள் குப்பை வண்டியில் வருகை தந்து அரசாங்கத்திற்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றிய உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படவில்லை.

அதனால், அவர்கள் இன்று குப்பை வண்டியில் மாவட்ட ஒருஙகிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்ததாகப் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியள் ராசமாணிக்கம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உள்ளூராட்சித் தலைவர்களின் வாகனங்களைக் கைப்பற்றியுள்ள அரசாங்கம் அவற்றை ஏலத்தில் விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே தமது கட்சி உறுப்பினர்கள் அவ்வாறு வருகை தந்ததாக் குறிப்பிட்டுள்ள ராசமாணிக்கம், தேசிய மக்கள் சக்தி கைப்பற்றாத சபைகளை ஒடுக்கும் அரசின் நோக்கம் தெளிவாகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

சொகுசு வாகனங்களைப் பயன்படுத்தாமல் சிக்கன ஆட்சி செய்வதாக அரசாங்கம் கூறினாலும், கிழக்கு மாகாண ஆளுநர் வீ8 ரக வாகனத்தைப் பயன்படுத்துவதாகவும் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.