பஸ்ஸுக்கும் லொறிக்குமிடையில் சிக்கிய கார். படம்: நியுஸ்வயர்
பல வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தால் லொறிக்கும் பஸ்ஸுக்குமிடையில் சிக்கிய கார் பெரும் ஆபத்தைச் சந்தித்தது
கடவத்தைக்கும் மஹரவுக்குமிடையில் இன்று காலை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாதசாரிகள் கடவையில் லொறியொன்றுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த கார் மீது பினனால் வந்த பஸ் மோதியது. அந்தத் தாக்கத்தினால், கார் லொறிக்கும் பஸ்ஸுக்கும் இடையில் சிக்குண்டது.
சம்பவத்தையடுத்து பஸ்ஸின் சாரதி தப்பியோடிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

