திருப்பழுகாமத்தில் சங்காபிஷேகமும் பாற்குட பவனியும்

மட்டக்களப்பு திருப்பழுகாமத்தில் சங்காபிஷேகமும் பாற்குட பவனியும் பக்திப்பூர்வமாக இன்று (20) நடைபெற்றது.

திருப்பழுகாமம் கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வரநாதர் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகமும் பாற்குடபவனியும் இன்றைய தினம் (20) சிறப்பாக நடைபெற்றது.

பாற்குடபவனி திருப்பழுகாமம் ஏரிக்கரைப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி பிரதான வீதி வழியாக சிவன் ஆலயத்தை வந்தடைந்தது. இந்நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சா.நடனசபேசன்