லக்‌ஸபான போக்குவரத்து இயல்பு நிலை

மண்சரிவினால் பாதிக்கப்பட்டிருந்த லக்‌ஸபான போக்குவரத்து இயல்பு நிலை அடைந்துள்ளது.

மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நோர்டன்பிரிட்ஜ், மஸ்கெலியா, லக்சபான பிரதான வீதியில் மண்மேடு சரிந்து விழுந்து பிரதான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பிரதான போக்குவரத்து தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை நோர்டன்பிரிட்ஜ் பெட்ரோல் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் மண் மேடு சரிந்தது.

பின்னர் லக்சபான இராணுவ முகாம், நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரிகள், நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் ஆகியோரால் சரிந்த மண்மேடு அகற்றப்பட்டது, அதன் பின்னர் வீதியின் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.

தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், மத்திய மலைநாட்டில் உள்ள பிரதான, சிறிய வீதிகளில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்குமாறு நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர்.