கொழும்பு பொரளைப் பகுதியில் பல வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி என்றும் பலர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொரளை பகுதியில் இன்று (28) காலை கனரக வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்களுடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

