கொழும்பு கனவு நகரத் திறப்புவிழாவில் ஹிரித்திக் ரோஷன் கலந்துகொள்வாரென்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசியாவிலேயே மிகப் பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் கொழும்பு கனவு நகரம் எனப்படும் உல்லாசத் தங்குவிடுதி நாளை ஓகஸ்ட் இரண்டாம் திகதி கோலாகலமாகத் திறந்துவைக்கப்படுகிறது.
இந்தத் திறப்பு விழாவில் பொலிவுட் நட்சத்திரம் ஷா ருக் கான் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும். தனது தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த விழாவில் பங்குபற்ற முடியாது என்று ஷா ருக் கான் அறிவித்திருக்கிறார்.
எனவே, அவருக்குப் பதிலாக மற்றொரு பொலிவுட் நட்சத்திரமான ஹிரித்திக் ரோஷன் வருகை தருகிறாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாருக் கான் இலங்கை வரமாட்டார்

