இலங்கையின் புதிய பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன இன்று (27) காலை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.
உச்ச நீதிமன்றத்தின் நீதியரசராக நீண்டகாலம் பணியாற்றிய அவர் இலங்கையின் 49ஆவது பிரதம நீதியரசராக இன்று பதவி ஏற்றார்.
பிரதம நீதியரசராகப் பதவி வகித்த முர்து பெர்னாண்டோ இன்றுடன் ஓய்வுபெறுகிறார்.
நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவை பிரதம நீதியரசர் பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி பரிந்துரை செய்திருந்தார். ஜனாதிபதியின் பரிந்துரையை அரசியலமைப்புப் பேரவை அங்கீகரித்துள்ளது.
புதிய பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன

