மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆடி அமாவாசை வழிபாடு மிகச் சிறப்பாக இன்று (24) நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் பிதிர்க்கடன் செலுத்தும் ஆடி அமாவாசை வழிபாடுகள் இன்று அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் பக்தி பூர்வமாக நடைபெற்றன.
இந்துக்களின் வாழ்வில் சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் சந்திக்கும் வருடத்தில் வரும் சிறப்பு ஆடி அமாவாசை இன்றாகும்
புண்ணிய லோகத்தில் இருந்து பூமிக்கு வரும் முன்னோர்கள் வரும் இன்றைய தினத்தில், பிதிர்க் கடன் செலுத்தினால் அஃது ஆண்டு முழுவதும் செலுத்துவதற்குரிய பலனை தரும் ஆடி அமாவாசை தினமாகும்
தந்தையை இழந்த வர்கள் இன்று விரதம் இருந்து ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகலில் ஈடுபட்டுத் தீர்த்தக் கரையில் இருக்கும் ஆலய குருக்களிடம் எள்ளும் தண்ணீரும் முன்னோர்களை நினைத்து அர்ச்சனை செய்வர்.
பின்னர் அரிசி, மரக்கறி தானம் வழங்கி நண்பகல் தீர்த்த மாடி ஆலயங்களில் வழங்கும் அன்னதானங்களை உண்டு தமது விரதங்களை முடிவுறுத்துவார்கள்
இதேவேளை, ஆடி அமாவாசை தினத்தையொட்டி இன்று பெருமளவிலான அடியார்கள் கலந்து கொண்டு தமது பிதிர்க் கடன்களை நிறைவேற்றிக் கொண்டனர்
மாமாங்கேஸ்வரர் ஆடி அமாவாசை வழிபாடு களில் கிழக்கு மாகாணத்திலிருந்து பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்

