தேரரின் இறுதிக்கிரியை 24ஆம் திகதி

ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரரின் இறுதிக்கிரியை 24ஆம் திகதி கண்டி பொலிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

அஸ்கிரிய பீடத்தில் அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு இறுதிக்கிரியை நடைபெற்று பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு 2.30 தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகளை புத்தசாசன அமைச்சு மேற்கொண்டுள்ளது.

அஸ்கிரிய மகாநாயக்க மஹா விகாரையின் அனுநாயக்கராக (உபமகாநாயக்கர்) பதவி வகித்த ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் அமரரானார். அவர் தனது 67 ஆவது வயதில் அமரத்துவம் அடைந்தார்..

தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு (20) அவர் இறையடி சேர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக மட்டத்தில் நீண்ட காலமாகப் பணி புரிந்த தம்மதஸ்ஸி தேரரின் மறைவு பலரிடையே ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.