வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் இடையூறு

வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் இடையூறு ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இணைய வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License) பெறும் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளதாக இலங்கை தகவல், தொடர்பாடல், தொழினுட்ப முகவர் நிலையம் (ICTA) அறிவித்துள்ளது.

ஜூலை 3ஆம் திகதி முதல், ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறினால் இந்தச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ICTA வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேவைகள் ஜூலை 9ஆம் தேதி வரை செயலிழந்திருக்கலாம். தொழில் நுட்பச் சிக்கலுக்குத் தீர்வு காணும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன், அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்துத் துறையை மேம்படுத்த நடவடிக்கை