minister

இலங்கை நபர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுக் கடுமையாக தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கடற்றொழில், நீரியல், கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் மனித உரிமைகளை மீறும் அதேவேளை, அண்டை நாடுகளுக்கிடையிலான பரஸ்பர மரியாதை, நம்பிக்கையையும் பாதிக்கும் வகையிலானது என அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, பொதுமக்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதிப்படுத்துவது எந்த நாட்டிற்கும் அடிப்படைப் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இலங்கை கடற்பரப்பிற்குள் அடிக்கடி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகள் குறித்து நீண்டகாலமாகவே இலங்கை மீனவர்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.

பல சந்தர்ப்பங்களில் இலங்கை மீனவர்கள் அமைதியான முறையில் நடந்துகொண்டு, இந்திய மீனவர்களை “தொப்புள் கொடி உறவுகள்” என்ற உணர்வோடு அணுகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

க.கிஷாந்தன்

ஊடகச் செயலாளர்

கடற்றொழில், நீரியல்,கடல்வளங்கள் அமைச்சு