ஆஸ்திரேலியாவிலிருந்து ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாட்டு இறைச்சி, கோதுமை, பார்லி உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை 20 வீதம் வரை உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணம் உயர்ந்துவரும் உரம் மற்றும் எரிபொருள் விலை.
ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்குப் பகுதிகளிலிருந்து எரிபொருள், உரம் உள்ளிட்டவற்றுக்கான விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆஸ்திரேலியாவில் உள்ள விவசாயிகள் வேளாண் துறையில் தங்களது நடவடிக்கையைக் குறைத்துக் கொண்டனர். இதன் காரணமாக உணவுப் பொருள்கள் சந்தையில் போதுமான அளவில் இல்லை.
ஆஸ்திரேலியாவின் உணவுப் பொருள்களின் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 70 வீதம ஆசிய நாடுகளுக்குச் செல்கின்றன.
அதேபோல், ஆஸ்திரேலியாவின் மாட்டு இறைச்சியைச் சீனா, ஜப்பான், அமெரிக்கா, இந்தோனீசியா, தென்கொரியா ஆகிய நாடுகள் இறக்குமதி செய்கின்றன.
ஆஸ்திரேலியா அதன் விவசாயத்திற்குத் தேவையான உரங்களில் 65 வீதத்தை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. அதேபோல் 90 வீத எரிபொருளும் மத்திய கிழக்கிலிருந்து வருகிறது.
