இரத்தினபுரி மாவட்டத்தில் மண் சரிவு அபாயம்

இரத்தினபுரி, குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (23) மாலை நான்கு மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை 24 மணித்தியாலத்திற்கு அமலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

இரத்தினபுரி மமாவடத்தின் குருவிற்றை, எகலியகொடை, நிவித்திகலை, கலவானை, இரத்தினபுரி, பெல்மதுளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் குருணாகல் மாவட்டத்தின் ரிதிகமை பிரதேச செயலாளர் பிரிவிலும் உள்ள மக்கள் மண்சரிவு குறித்த விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.