மசகு எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

மத்திய கிழக்கு மோதல்கள் ஆரம்பித்த பின்னர் மசகு எண்ணெய் ஏற்றி வந்த முதல் கப்பல் நேற்று (17) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததாக துறைமுகங்கள்,சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வந்த, இந்தியக் கப்பல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான (DESH MAHIMA) என்ற கப்பல், 97500 மெட்ரிக் டொன் மசகு எண்ணெயை நாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.

இந்த மசகு எண்ணெய் தற்போது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பும் பணியைத் தொடங்கியுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.