மட்டக்குளியில் பஸ் மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (10) நண்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த மாணவி மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயதுடையவர் ஆவார்.
