நிலவு பயணத்தின் பின் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ் II

ஆர்டெமிஸ் II (Artemis II) திட்டத்தின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க நிலவுப் பயணத்தை மேற்கொண்ட ஒராயன் (Orion) விண்கலம், தனது நிலவு ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளது.

ஒராயன் விண்கலம் இலங்கை நேரப்படி இன்று (11) அதிகாலை 5.30 அளவில் கலிபோர்னியாவின் சென் டியாகோ கடற்கரைக்கு அப்பால் உள்ள பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

10 நாள் கொண்ட இந்த விண்வெளிப் பயணத்தை முன்னெடுத்து, ஒராயன் விண்கலம் கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி நிலவை நோக்கித் தனது பயணத்தை ஆரம்பித்தது.

இந்தத் திட்டத்தின் கீழ், விண்வெளி வீரர்கள் 406,771 கிலோமீட்டர் (252,756 மைல்கள்) தூரத்தைக் கொண்ட நிலவுப் பயணத்தைப் பூர்த்தி செய்துள்ளனர்.

மனிதகுலம் விண்வெளியில் இதுவரை பயணம் செய்த அதிகூடிய தூரம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.