இயேசுபிரானின் தவக்காலத்தின் இறுதி விசேட தினத்தை மன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று காலை விசேட ஆராதனைகள் இடம்பெற்றன
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் உள்ள சீயோன் தேவாலயத்தில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடு ஆராதனைகள் ஆலய பிரதம போதகர் ரோஷான் மகேசன் தலைமையில் நடைபெற்றன.
கடந்த ஆறு வருடங்களுக்கு முன் இதே தினத்தில் குண்டு வெடிப்பின் போது உயிரிழந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் விசேட நினைவஞ்சலி ஆராதனைகள் இடம் பெற்றதுன.
ஆலய வளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இந்த ஆராதனை வழிபாடுகளில் அதிகளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.
எஸ். வரதராஜன் மட்டக்களப்பு






