ஈரானின் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட F-15E ரக விமானத்திலிருந்து காணாமல் போன இரண்டாவது விமானி மீட்கப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.
“நாங்கள் அவரைக் கண்டுபிடித்துவிட்டோம்! என் சக அமெரிக்கர்களே, கடந்த சில மணிநேரங்களாக, அமெரிக்க இராணுவம், அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் துணிச்சலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. நமது அற்புதமான விமானப் படை அதிகாரிகளில் ஒருவரும், மிகவும் மதிக்கப்படும் ஒரு கேர்ணலுமான அவர் , தற்போது பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!” என்று தனது சொந்த சமூக வலைத்தளமான ருத் சோஷல் ஊடகத்தில் திருஃ டிரம்ப் குறிப்பிட்டுள்ளதாக எக்கனமிக் ரைம்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
ஈரானின்நிலப்பரப்பிலேயே அமெரிக்கப் படைகள் இந்த மீட்பு நடவடிக்கையை நிறைவேற்றியிருக்கிறதென்றால், அவர்களின் திறமையைப் புரிந்துகொள்ள முடியும் என்றும் திரு.டிரம்ப் தெரிவித்துள்ளார்.
