வடக்கிற்கான ரயில் சேவை 9 ஆம் திகதி முதல் மீள ஆரம்பம்

வடக்குக்கான ரயில் சேவைகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப் படவுள்ளதாக யாழ்ப்பாண ரயில் நிலையப் பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்துள்ளார்.

மஹவ முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதையில் ஐந்து பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் வடக்குக்கான புகையிரத சேவைகள் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, எதிர்வரும் 9ஆம் திகதி முதல் புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கான இருக்கை முன்பதிவுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், பயணிகள் தமக்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.