எமது வளங்கள் மீது முடிந்தால் கை வைத்துப் பார் - ஈரான்

ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடு முடிவடைய இன்னும் 24 மணித்தியாலம் எஞ்சியிருக்கும் நிலையில், தங்கள் வளங்கள் மீது தாக்குதல் நடத்தினால், நரகத்தைப் பொழியப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எண்ணெய்க் கப்பல் போக்குவரவுக்காக ஹொர்முஸ் நீரிணை திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின்சாரக் கட்டமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வளங்களைத் தகர்க்கப்பபோவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை ஏப்பிறல் ஆறாந்திகதி வரை காலக்கெடு விதித்திருக்கிறார்.

எனினும், அவரின் காலக்கெடுவை நிராகரித்துள்ள ஈரான், உள்கட்டமைப்பு வளங்களைத் தாக்கினால், நரகத்தைப் பொழிவோம் என்று எச்சரித்துள்ளது.