மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை

நேற்று 11 ஆம் திகதி அதிகாலை 3 மணி முதல் இன்று 12 ஆம் திகதி காலை 10.45 வரை மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது

இதனால் சாமிமலை, மஸ்கெலியா, நல்லதண்ணி ஆகிய நகரங்கள், நகரை அண்டிய பெருந்தோட்டப் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

இதன் காரணமாகப் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள தேயிலை தொழிற்சாலை வேலைகள் ஸ்தம்பிதம் அடைந்தன அத்துடன் நகரில் உள்ள வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்க பட்டனர்.

சிவனொளிபாதமலைக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அதிகாலை வேளையில் சூரிய உதயம் பார்க்க நல்லதண்ணி நகரில் உள்ள விருந்தினர் விடுதியில் தங்கியிருந்து செல்வார்கள். இன்று அதிகாலை வேளையில் 3 மணி முதல் மின் தடை ஏற்பட்டதால் அவர்கள் சூரிய உதயம் பார்க்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக விருந்தினர் விடுதி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி உடன் நடவடிக்கை

மஸ்கெலியா நிருபர். செ. தி. பெருமாள்